Dec 3, 2025
Thisaigal NewsYouTube
புதிய ஃபெரி பினாங்கு சுற்றுலாவை ஊக்குவிக்கும்
தற்போதைய செய்திகள்

புதிய ஃபெரி பினாங்கு சுற்றுலாவை ஊக்குவிக்கும்

Share:

பினாங்கில் கடந்த வாரம் அறிமுகபடுத்தப்பட்ட புதிய மாடல் அமைப்பிலான ஃபெரி, அம்மாநிலத்தின் சுற்றுலாத்துறையை வெகுவாக ஊக்குவிக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

அண்டை நாடான தாய்லாந்தில் அமல்படுத்தப்பட்டதைப்போல அந்த ஃபெரி சேவை வாடகைக்கு விடப்படும் சூழலும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஃபெரி சேவைகளின் பயணிகள் கொள்ளளவு, நடப்புத் தேவையைவிட போதுமான அளவிற்கு இருக்கிறது.

மூன்று ஃபெரிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள வேளையில் மீதமுள்ள ஒரு ஃபெரி, சுற்றுலாவை ஊக்குவிக்க வாடகைக்கு விடமுடியும் என்று அந்தோணி லோக் கூறினார்.

Related News