கோலாலம்பூர், அக்டோபர்.22-
இன்று மாலை தலைநகர் முழுவதும் பெய்த பலத்த கனமழையால், மரம் விழுந்த இரண்டு தனித்தனி சம்பவங்களில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்ததுடன், ஒரு பெண் காயம் அடைந்ததாகவும் கோலாலம்பூர் மலேசிய தீயணைப்பு – மீட்புப் படையின் செயல்பாட்டு மையத்தின் தலைமை அறிவித்துள்ளது. பெர்சியாரான் டூத்தாமாஸ், Hartamas Regencyயில் நடந்த சம்பவத்தில், கார் ஒன்றின் மீது மரம் விழுந்ததில் அதில் பயணித்த 40 வயது நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு சம்பவமாக கெப்போங் பாருவில் உள்ள ஜாலான் மெட்ரோ பிரிமாவில் பகுதியில் மரம் விழுந்ததில் ஒரு பெண் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாகக் கோலாலம்பூரில் பல இடங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணியும் மரம் அகற்றும் பணிகளையும் தீயணைப்புப் படை முடுக்கி விட்டுள்ளது.








