முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்குப் பொது மன்னிப்பு வழங்கும் விவகாரத்தில், இனியும் சட்ட நடைமுறைகள் எதுவும் இல்லை. இவ்விவகாரம் இனி மாமன்னரின் விவேகத்திற்கு உட்பட்டதாகும் என்று சட்டத் துறை அமைச்சர் அஸாலினா ஒத்மான் சைட் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், நஜீப்பிற்கு அரச மன்னிப்பு வழங்கும்படி யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்பதையும் அமைச்சர் தெளிவுப்படுத்தினார். கூட்டரசு அமைப்பு சட்டத்தின் 42 ஆவது விதியின் கீழ், அரச மன்னிப்பு என்பது, மாமன்னரின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும். இதனை மாமன்னரிடமே விட்டுவிடுவதுதான் முறையாகும் என்று அம்னோ தகவல் பிரிவுத் தலைவருமான அஸாலினா குறிப்பிட்டார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


