Jul 1, 2026
Thisaigal NewsYouTube
ஹார்முஸ் நீர்ச்சந்தி நெருக்கடி: நீண்டகால பொருளாதார பாதிப்புகளைச் சமாளிக்க மலேசியா தயார்
தற்போதைய செய்திகள்

ஹார்முஸ் நீர்ச்சந்தி நெருக்கடி: நீண்டகால பொருளாதார பாதிப்புகளைச் சமாளிக்க மலேசியா தயார்

Share:

ஹார்முஸ் நீரிணையில் நிலவும் போர் பதற்றத்தால் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள, மலேசிய அரசு நீண்டகால நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டதாக பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மார்ச் மாதத்தில் பணவீக்கம் 1.7 விழுக்காடாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை RM4.09 ஆகவும், RON97 விலை RM4.01 ஆகவும் அதிகரித்துள்ளது.

இது வெறும் எரிபொருள் விலை உயர்வு மட்டுமல்ல; போக்குவரத்து, காப்புறுதி மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் ஒரு உலகளாவிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளதாக அமைச்சு எச்சரித்துள்ளது.

விநியோகச் சங்கிலியைப் பாதுகாக்க ஆஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகளுடன் வர்த்தக உறவை வலுப்படுத்தவும், சுற்றுலாத்துறை மூலம் அந்நியச் செலாவணியை அதிகரிக்கவும் தேசிய பொருளாதார நடவடிக்கை மன்றம் முடிவு செய்துள்ளது.

பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக இருந்தாலும், வரும் மாதங்களில் ஏற்படக்கூடிய சவால்களைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது என் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை