Sep 26, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுகின்றதா? - மந்திரி பெசார் ஓன் ஹபீஸ் காசி மறுப்பு
தற்போதைய செய்திகள்

ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுகின்றதா? - மந்திரி பெசார் ஓன் ஹபீஸ் காசி மறுப்பு

Share:

ஜோகூர் மாநில சட்டமன்றம் இன்று கலைக்கப்படும் என்ற வதந்திகளை மாநில மந்திரி பெசார் ஓன் ஹபீஸ் காசி மறுத்துள்ளார்.

சமீப காலமாக ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டு மாநிலத் தேர்தல் நடைபெறலாம் என்ற ஊகங்கள் அதிகரித்துள்ளன.

அரசியல் தலைவர்கள் பலர் தேர்தல் குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவித்து, சில தொகுதிகளுக்கு உரிமை கோரியும் வருகின்றனர்.

இந்நிலையில், இன்று ஜோகூர் மாநில சட்டமன்றத்தில் உரையாற்றிய ஓன் ஹபீஸ் காசி, மாநிலத் தேர்தல் தொடர்பான விவாதங்களை தற்போது ஒதுக்கிவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், மக்கள் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுமாறு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் அவர் வலியுறுத்தியதாகத் தகவல்கள் கூறுகின்றன.

Related News