புக்கிட் மெர்தஜாம், நவம்பர்.22-
முற்போக்கான சம்பளக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த 11 மாதங்களுக்குள் நாடு தழுவிய நிலையில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலன் பெற்றுள்ளனர் என்று மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
இது திறன் மற்றும் உற்பத்தித் திறன் ஆகியவற்றின் அடிப்படையிலான ஊதிய முறையாகும். இந்தச் சம்பள முறை, தொழில்துறையினருக்கு வலுவான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
தொழில் நிபுணத்துவம் பெற்றவர்கள் முதல் இயந்திர ஆப்ரேட்டர்கள் வரை நன்மை அளிக்க வல்ல முற்போக்கான சம்பள முறை, முதலாளிகள் மற்றும் ஊழியர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் விளக்கினார்.
இன்று பினாங்கு, செபராங் ஜெயாவில் உள்ள The Light ஹோட்டலில் முற்போக்கான சம்பள முறை தொடர்பான கலந்துரையாடல் மற்றும் முதலாளிகளைப் பாராட்டும் நிகழ்வில் அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனைத் தெரிவித்தார்.








