May 22, 2026
Thisaigal NewsYouTube
விசாரணை இறுதி கட்டத்தில் உள்ளது
தற்போதைய செய்திகள்

விசாரணை இறுதி கட்டத்தில் உள்ளது

Share:

ஜோகூர், பிப்ரவரி 27 -

ஜோகூரில் கடந்த மாதம் முற்பகுதியில் பொது மக்களை மிரட்டி 35 ஆயிரம் வெள்ளி ரொக்கப்பணத்தை பறித்ததாக கூறப்படும் புகார் தொடர்பில் போலீஸ்காரர்கள் மற்றும் போலீஸ் அதிகாரி என பத்து பேர் சம்பந்தப்பட்ட புலன் விசாரணை, தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் கே. குமார் தெரிவித்தார்.

விசாரணை முழுமையாக முடிவடைந்து அறிக்கை தயாரானதும், உரிய நடவடிக்கைக்காக சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று கமிஷனர் குமார் குறிப்பிட்டார்.
இப்புலன் விசாரணையில் தடயவியல் பிரிவு மற்றும் பேங்க் நெகாரா மலேசியா ஆகியவற்றின் அறிக்கைக்காக போலீசார் காத்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.

Related News