Jul 28, 2026
Thisaigal NewsYouTube
ஹெராயின் போதைப்பொருள் கடத்தல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சகோதரர்கள் உட்பட 7 பேர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

ஹெராயின் போதைப்பொருள் கடத்தல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சகோதரர்கள் உட்பட 7 பேர் மீது குற்றச்சாட்டு

Share:

ஈப்போ, ஜூலை.28-

சுமார் 118.87 கிராம் ஹெராயின் போதைப்பொருளைக் கடத்தியதாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு உடன்பிறப்புகள் மற்றும் அவர்களின் நண்பர் ஒருவருக்கு எதிராக ஈப்போ, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

41 வயது Muhammad Affandi Zulkafli, அவரின் ஐந்து சகோதர்களான 38 வயது Shahrul Azwan, 40 வயது Muhammad Khairul Azmil, 29 வயது Muhammad Amirul, 27 வயது Mohamad Hafizi மற்றும் 35 வயது Mohamad Shah Herman ஆகியோரும், அவர்களின் நண்பரான 43 வயது , Mohd Ismail Borhan என்பவரும் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

கடந்த ஜூலை 21-ஆம் தேதி இரவு 9:20 மணியளவில், ஈப்போ, Chemor பகுதியிலுள்ள Kampung Che Zainal கிராமத்தில் முகவரியற்ற தற்காலிகக் குடிலில் இந்த எழுவரும் போதைப்பொருளைக் கடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் 1952 ஆம் ஆண்டு போதைப்பொருள் சட்டத்தின் கீழ் எழுவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

மாஜிஸ்திரேட் Norizan Riduan. முன்னிலையில் நிறுத்தப்பட்ட இந்த எழுவருக்கு எதிரான குற்றச்சாட்டு, உயர் நீதிமன்ற அதிகார வரம்பிற்கு உட்பட்டதால் இவர்களிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

Related News

வாக்களிக்கப் போலீசாருக்கு லஞ்சமா?

வாக்களிக்கப் போலீசாருக்கு லஞ்சமா?

விமானத் தாமதத்தால் ஊழியர்களிடம் வம்பு: கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் இந்தோனேசிய வாலிபர் கைது

விமானத் தாமதத்தால் ஊழியர்களிடம் வம்பு: கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் இந்தோனேசிய வாலிபர் கைது

Deepfake  மற்றும் ஏஐ மோசடிகளைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்: டிஜிட்டல் அமைச்சர் கோவிந்த் சிங் அறிவிப்பு

Deepfake மற்றும் ஏஐ மோசடிகளைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்: டிஜிட்டல் அமைச்சர் கோவிந்த் சிங் அறிவிப்பு

கோர விபத்து: இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி மூவர் சம்பவ இடத்திலேயே பலி

கோர விபத்து: இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி மூவர் சம்பவ இடத்திலேயே பலி

ஒரு லட்சம்  இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார்  அறிவிப்பு

ஒரு லட்சம் இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார் அறிவிப்பு

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்