Mar 13, 2026
Thisaigal NewsYouTube
டாக்டர் சத்தியாவின் விரைந்த செயல் ஒரு முதியவரை காப்பாற்றியது
தற்போதைய செய்திகள்

டாக்டர் சத்தியாவின் விரைந்த செயல் ஒரு முதியவரை காப்பாற்றியது

Share:

விமானத்தில் பயணித்து கொண்டிருக்கும் பொழுது ஒரு முதியவருக்கு அவசர சிகிச்சை அளித்த ரவாங் நகரைச் சேர்ந்த டாக்டர் சத்தியாவின் விரைந்த செயல் அம்மூதாட்டியின் உயிரை காப்பாற்றியது.

கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஏர் ஆசியா AK 13, விமானத்தில் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது இச்சமபவம் நடந்ததாக தன்னுடைய முகநூல் அகப்பக்கத்தில் கவலையாக டாக்டர் சத்தியா தெரிவித்திருந்தார்.

80 வயதான மூதாட்டி ஒருவர் கோலாலம்பூரிலிருந்து பெங்களூரில் இருக்கும் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். திடீரென்று உடல் வியர்க்கத் தொடங்கியதாகவும் மயக்கமாக இருப்பதாகவும் கூறியிருந்தார். சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 30 நிமிடத்திற்கு முன் இச்சம்பவம் நடந்ததாக தெரியவந்துள்ளது.

எங்கு சென்றாலும் ஸ்டெதாஸ்கோப் மானி எடுத்துச் செல்லும் பழக்கம் இருப்பதால் தக்க சமயத்தில் மூதாட்டிக்கு அக்கருவி உதவி சரியான நேரத்தில் அம்மூதாட்டிக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டன என்று டாக்டர் சத்தியா முகநூலில் அறிவித்திருந்தார்.

அனைத்து விமான நிறுவனங்களும் எப்பொழுதும் அவசர சிகிச்சைக்குப் பயன்படுத்தக்கூடிய ரத்த அழுத்த பரிசோதனை கருவி, ஸ்டெதாஸ்கோப் போன்ற கருவிகள் தயாராக வைத்திருக்குமாறு டாக்டர் சத்தியா கேட்டுக் கொண்டார்.

டாக்டர் சத்தியா தக்க சமயத்தில் செய்த அந்நடவடிக்கை பலரது மனதை கவர்ந்திருந்ததாகவும் அவருக்கு பாராட்டுக்களையும் வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Related News

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு