கோத்தா கினபாலு, செப்டம்பர்.17-
பள்ளி விடுதி குறித்து எந்த ஒரு புகாரையும் மாணவி ஸாரா கைரினா மகாதீர் அளிக்கவில்லை என செகோலா மெனெங்கா கெபங்சாஆன் அகாமா துன் டத்து முஸ்தபா பள்ளியைச் சேர்ந்த தலைமை வார்டன் அஸாரி அப்துல் சகாப் இன்று நீதிமன்ற விசாரணையில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 16-ம் தேதி, அதிகாலை 3 மணியளவில், பள்ளியின் பாதுகாவலர் தனக்கு நடந்த சம்பவம் குறித்து தகவல் அளித்தாகவும், உடனே தான் நேரில் அங்கு சென்று பார்த்த போது ஸாரா சுயநினைவின்றி கிடந்ததாகவும் அவர் சாட்சியம் அளித்துள்ளார்.
அதே வேளையில், 5 மாணவர்களின் உதவியோடு ஸாராவை அங்கிருந்து தரைத் தளம் ஒன்றிற்கு நகர்த்தியதாகவும் அஸாரி தெரிவித்துள்ளார்.
மேலும், ஸாராவை அங்கிருந்து நகர்த்தும் போது, அவ்விடத்தில் இரத்தம் படிந்திருந்ததைப் பார்த்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.








