Sep 14, 2026
Thisaigal NewsYouTube
நாட்டில் டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் 56 விழுக்காடு உயர்வு
தற்போதைய செய்திகள்

நாட்டில் டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் 56 விழுக்காடு உயர்வு

Share:

நாடு முழுவதும் மொத்தம் 58,079 டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 56.2% உயர்வாகும்.

மேலும், இந்த நோயின் தீவிர பக்கவிளைவுகளால் இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நோய் பரவல் ஆரம்பத்தில் சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா உள்ளிட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் அதிக அளவில் காணப்பட்டது..

மாறிவரும் வானிலை ஏடிஸ் கொசுக்கள் பெருகுவதற்கு ஏதுவான சூழலை உருவாக்குகிறது. மேலும், வீடுகளையொட்டிய பகுதிகளில் நீர் தேங்கும் பொருட்கள் முறையாக பராமரிக்கப்படாததே இந்த நோய் விரைவாக பரவுவதற்கு முக்கிய காரணமாகும்.

Related News