Aug 21, 2026
Thisaigal NewsYouTube
இரவு விடுதி ஒன்றில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும் -  கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர்
தற்போதைய செய்திகள்

இரவு விடுதி ஒன்றில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும் - கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர்

Share:

இங்குள்ள ஒரு கேளிக்கை விடுதியில் 28 வயதுடைய வெளிநாட்டுப் பெண் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணையை மீண்டும் தொடங்குமாறு கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் கெப்போங் புக்கிட் அமான் தலைமையகத்தை வலியுறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணான டாவ் தி கிம் திரா கடந்த 4-ஆம் தேதி மாலை 4 மணியளவில் அந்த விடுதியில் இருந்தபோது, ​​தனது நண்பர் தன்னை வி.ஐ.பி அறைக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு இரு ஆண்கள் இருந்ததாகவும் கூறினார். அதில் ஒருவர் தன்னை யார் என்றும் மேலும் சில கேள்விகளைக் கேட்டுள்ளார்.

ஆனால் சீன மொழி அவ்வளவாகத் தெரியாததால், அவற்றைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று கூறியதற்கு அந்த இருவரும் தன்னை தாக்கியதாக டாவ் தி தெரிவித்தார்.

அதன் பின்னர், பாதிக்கப்பட்ட பெண் துப்பாக்கியைக் கொண்டு மிரட்டப்பட்டதாகவும் லிம் தெரிவித்தார். அப்பெண்ணின் இடது கண், தலை மற்றும் வயிற்றில் பலமுறை தாக்கப்பட்டதாகவும், இடது கண்ணில் ரத்தக்கசிவு மற்றும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சித்தரவதைக்கு உள்ளான அப்பெண் தனது நண்பர் உதவியுடன் இரவு 9 மணியளவில் விடுவிக்கப்பட்டார்.

ஆகஸ்ட் 6 , வாங்சா மாஜு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்திய இருவரில் ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டதாகவும், இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டது நியாயமற்றது என லிம் லிப் எங் வாதிட்டார்.

துப்பாக்கியைக் காட்டி மிரட்டுவது மிகவும் தீவிரமான குற்றமாகும். எனவே, புக்கிட் அமான் தலைமையகம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என லிம் லிப் எங் வலியுறுத்தியுள்ளார்.

Related News