Sep 6, 2026
Thisaigal NewsYouTube
புத்ராஜெயாவில் தேசிய தினக் கொண்டாட்டம்; ஆயத்த பணிகள் மும்முரம்
தற்போதைய செய்திகள்

புத்ராஜெயாவில் தேசிய தினக் கொண்டாட்டம்; ஆயத்த பணிகள் மும்முரம்

Share:

இவ்வாண்டு தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு புத்ராஜெயா சதுக்கத்தில் 80,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கூடுவார்கள் என இலக்கிடப்பட்டுள்ளது.

“மலேசியா மடானி: நல்வாழ்வு அனைவருக்கும்” (Malaysia Madani: Kesejahteraan Dinikmati) என்ற கருப்பொருளில் இவ்வாண்டுக்கான தேசிய தினக் கொண்டாட்டம் அனுசரிக்கப்படுகிறது.

தற்போது இதற்கான ஏற்பாடுகள் 85 முதல் 90 விழுக்காடு வரை நிறைவடைந்துள்ளன. அனைத்துப் பிரிவுகளின் பயிற்சிகள் உட்பட பல்வேறு கட்டப் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகத் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தலைமைச் செயலாளர் டத்தோ அப்துல் ஹலீம் ஹம்சா தெரிவித்தார்.

உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, அரசு இம்முறை மிதமான நிதி ஒதுக்கீட்டிலேயே நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள நிலையில், வான்வழிச் சாகசக் காட்சிகள் மற்றும் அணிவகுப்பு ஊர்திகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 26 முதல் 29 வரை 4 நாட்களுக்கு ஒத்திகைப் பயிற்சிகள் நடைபெறும் என்றும் இதில் 77 குழுக்களைச் சேர்ந்த 10,819 பேர், 328 எந்திரங்கள், 22 மின்சார வாகனங்கள், 112 விலங்குகள், 22 அணிவகுப்புக் இசைக்குழுக்கள் மற்றும் 11 அலங்கார ஊர்திகள் இதில் பங்கேற்கின்றன.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து