Sep 15, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூரைச் சேர்ந்த காதலர்களைக் கடத்திச் சென்று கொள்ளையடித்ததாக அறுவர் மீது குற்றம் சாட்டப்பட்டது
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூரைச் சேர்ந்த காதலர்களைக் கடத்திச் சென்று கொள்ளையடித்ததாக அறுவர் மீது குற்றம் சாட்டப்பட்டது

Share:

ஜொகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், சிங்கப்பூரைச் சேர்ந்த தம்பதியினரைக் கடத்தியது, சட்டவிரோதமாகச் சிறைவைத்தது, கொள்ளையடித்தது மற்றும் காயப்படுத்தியது ஆகிய நான்கு குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள்ளூர் ஆடவர்கள் அறுவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

46 வயது எம். பாலமுருகன் , 40 வயது கே. சரவணன், 41 வயது பி. ஸ்ரீ தேவி, 38 வயது ஜி. புகனேஸ்வரன், 38 வயது எஸ். கோபிநாத் மற்றும் 41 வயது எக்ஸ். அட்வின் நிக்கோலஸ் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆவர்.

நீதிபதி நூர் அசியாட்டி ஜாஃபர் முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பிறகு, அவர்கள் அனைவரும் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்தனர்.

ஆகஸ்ட் 8 அன்று மதியம் 2 மணியளவில்ஸ் கூடாய், ஜாலான் ஓர்கிட் உள்ள ஒரு தேவாலயத்திற்கு முன்னால், அல்-ஷமீர் பின் அப்துல் நாசர் என்பவரைக் கடத்தி 20,000 சிங்கப்பூர் டாலர் அதாவது 63,000 ரிங்கிட் பிணைத்தொகை கோரியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

1961-ஆம் ஆண்டு கடத்தல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3 மற்றும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 34 ஆகியவற்றின் கீழ் இந்தக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன; இக்குற்றங்களுக்கு அதிகபட்சமாக 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதனைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 50,000 ரிங்கிட் பிணைத்தொகையுடனும், இரு பிணையாளர்களின் உத்தரவாதத்துடனும் பிணை வழங்க நீதிமன்றம் அனுமதித்தது.

Related News