Sep 7, 2026
Thisaigal NewsYouTube
ஃபெல்டா தொடர்பான விசாரணை அறிக்கை விரைவில் வெளியிடப்படும்- பிரதமர் அன்வார்
தற்போதைய செய்திகள்

ஃபெல்டா தொடர்பான விசாரணை அறிக்கை விரைவில் வெளியிடப்படும்- பிரதமர் அன்வார்

Share:

இதனிடையே, தொடர்ந்து பேசிய பிரதமர் ஃபெல்டா தொடர்பான சிறப்பு பணிக்குழுவின் விசாரணை நிறைவடைந்ததும், அதன் முழுமையான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

விசாரணை அறிக்கை முழுமையாக கிடைத்தவுடன், அதன் முடிவுகள் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

ஃபெல்டாவின் முந்தைய நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளை அடையாளம் காண்பதுடன், அதன் நிர்வாகத்தை மேலும் மேம்படுத்துவதும் சிறப்பு பணிக்குழுவின் விசாரணையின் முக்கிய நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, முந்தைய நிர்வாகத்தில் தவறு செய்தவர்கள் மீது எவ்வித சமரசமுமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

சிறப்பு பணிக்குழுவின் விசாரணை தொடர்பான முன்னேற்றம் குறித்து ஏற்கனவே மாமன்னரிடம் விளக்கமளித்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து