கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இரண்டு தினங்களாக ஒன்பது மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் பொய்யான வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் 37 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளன என்று போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசெயின் தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணிக்கையில் இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணி வரையில் அளிக்கப்பட்டுள்ள புகார்களும் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் அனைத்துலக பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அரசாங்க உதவிப் பெற்ற பள்ளிகளும் அடங்கும் என்று ஐஜிபி விளக்கினார்.
சிலாங்கூர் மாநிலத்தில்தான் அதிகமாக புகார்கள் பெறப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அம்மாநிலத்தில் மொத்தம் 15 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து கோலாலம்பூரில் 6 புகார்களும், ஜோகூரில் 6 புகார்களும் பெறப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Related News

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

கூலிமில் கோர விபத்து... 75 வயது முதியவர் பலி, 3 பேர் காயம்

கோலாலம்பூரில் ஆயுதயேந்திய கொள்ளை... 2 பருவ வயது பெண்கள் உட்பட 7 பேர் கைது


