பேரா, சித்தியாவான் சிறப்புக் கல்வி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளது என மஞ்ச்சொங் மாவட்டக் காவல் துறைத் தலைவர் எசிஸ்தன் கமிஷ்னர் ,முஹமாட் நோர்டின் அப்துல்லா. அந்தப் புகாரை இன்று பிற்பகல் 2.00 மணி அளவில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கொடுத்துள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.00 மணி அளவில் அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து அந்த வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வாயிலாக வந்தது என தலைமை ஆசிரியர் கூறியதாக முஹமாட் நோர்டின் தெரிவித்தார்.
அனுப்பியவர் குறித்து தற்போது காவல் துறை விசாரித்து வருவதாக அவர் மேலும் சொன்னார்.








