Mar 16, 2026
Thisaigal NewsYouTube
தைப்பூசத்தை முன்னிட்டு FERRY சேவை 50 மணி நேரம் இலவசம் !
தற்போதைய செய்திகள்

தைப்பூசத்தை முன்னிட்டு FERRY சேவை 50 மணி நேரம் இலவசம் !

Share:

தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கு FERRY சேவை 50 மணி நேரம் இலமசமாக வழங்கப்பட உள்ளது, ஜனவரி 24 ஆம் தேதி நள்ளிரவு 12.01 முதல் ஜனவரி 26 ஆம் தேதி அதிகாலை 2.00 மணி வரை இச்சேவை இலவசமாக வழங்கப்பட உள்ளது.

இந்த இலவச சேவையை பினாங்கு மாநில துணைமுக ஆணையமும், Penang Port Sdn Bhd நிறுவனமும் வழங்கப்பட போக்குவரத்து அமைச்சு கட்டளை இட்டிருப்பதாக அதன் அமைச்சர் அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு தைப்பூசத்தை முன்னிட்டு 24 மணி நேரத்தைக் கடந்து அதிக நேரம் இலவச FERRY சேவை வழங்கப்படுவது இதுவே முதல்முறை.

அதே சமயம், வருகையாளர்களும் பக்தர்களும் கோயிலுக்குச் செல்ல இலவச பேருந்து சேவையும் வழங்கப்பட இருப்பதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

செபெராங் பிறாய்யில் இருந்து தீவுக்குச் செல்பவர்களுக்கு இந்த இலவச போக்குவரத்துச் சேவைகள் பெரும் உதவியாக இருக்கும்.

முன்னதாக, தைப்பூசத்தை முன்னிட்டு ஜனவரி 24, 25 ஆம் தேதிகளில் கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் செயல்படும் KTM Komuter சேவைகல் இலவசமாக வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும், ஜனவரி 23 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையில் 4 நாட்களுக்கு 24 KTM Komuter நிலையங்கள் இடைவிடாத 24 மணி நேர சேவையையும் வழங்க உள்ளன.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்