May 22, 2026
Thisaigal NewsYouTube
இன்று காலை தொடங்கி பிரதான நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் மெதுவாக நகர்கின்றன
தற்போதைய செய்திகள்

இன்று காலை தொடங்கி பிரதான நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் மெதுவாக நகர்கின்றன

Share:

வருகின்ற திங்கட்கிழமை Haji பெருநாளை முன்னிட்டு, பயணிகள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்ப தொடங்கியதை அடுத்து, இன்று காலை முதல் பிரதான நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் மெதுவாக நகர்கின்றன.

தலைநகரிலிருந்து கிழ‌க்கு கரையோரம் நோக்கி செல்லும் Kuala Lumpur - Karak நெடுஞ்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுவதால் போக்குவரத்து மெதுவாக நகர தொடங்கியிருப்பதாக மலேசிய நெடுஞ்சாலையின் ஆணையம் ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

Gombak Plaza Tol - லிலிருந்து Bukit Tinggi உட்பட Lentang மற்றும் Bentong ஆகிய பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அது கூறியிருந்தது.

மேலும், Sungai Buloh மற்றும் Tapah - விலிருந்து Gopeng - கிற்கு செல்லும் பாதையிலும் வாகனங்கள் மெதுவாக நகர்வதாக மலேசிய நெடுஞ்சாலையின் ஆணையம் தகவல் வெளியிட்டிருந்தது.

Related News