மலாக்கா, ஜனவரி.27-
மலாக்காவைச் சேர்ந்த ஒரு பாரம்பரிய பாபா நியோன்யா குடும்பம், வரும் சீனப் புத்தாண்டு முன்னிரவில் தங்களின் முன்னோர்களின் பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில் 20 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான வானவேடிக்கை நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
மலாக்கா, பூலாவ் காடோங் பகுதியைச் சேர்ந்த மைக் தின் என்பவரது குடும்பம், பல தலைமுறைகளாகப் பின்பற்றி வரும் இந்த வழக்கத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
இந்த பிரம்மாண்ட வானவேடிக்கைக்கான நிதி, மைக் தீனின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் கூட்டுப் பங்களிப்பின் மூலம் திரட்டப்பட்டது.
சீனப் புத்தாண்டு முன்னிரவில் நடைபெறும் குடும்ப மறுசந்திப்பு விருந்தின் போது, அவர்களின் பூர்வீக வீடான Rumah Abu அருகில் உள்ள திறந்த வெளியில் இந்த வானவேடிக்கை நிகழ்த்தப்படும்.
குதிரை ஆண்டை வரவேற்கும் விதமாகவும், தங்களின் கலாச்சாரத் தொடர்பைப் பேணவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக மைக் தீன் தெரிவித்துள்ளார்.
மலாக்காவில் பாபா நியோன்யா உணவு வகைகளுக்கான மவுசு அதிகரித்துள்ள வேளையில், இத்தகைய கலாச்சாரக் கொண்டாட்டங்கள் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்து வருகின்றன.








