கோலாலம்பூர், அக்டோபர்.01-
இன்று புதன்கிழமை நண்பகல் வரை, மலேசியாவில் 6 மாநிலங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பேராக், பகாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜோகூர் ஆகிய 6 மாநிலங்களில் பல இடங்களில் பலத்த காற்றும், கனமழையும் பெய்யும் வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வலியுறுத்தியுள்ளது.
இன்று நண்பகலில், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, மணிக்கு 20 மில்லி மீட்டருக்கும் மேல் மழை பொழியலாம் என்றும் மெட்மலேசியா தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.








