லங்காவி, அக்டோபர்.28-
லங்காவியில் நிறுத்தப்பட்டு இருந்த 3 பெர்ரிகள் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமுற்றன.
இந்தச் சம்பவம் குறித்து காலை 2.29 மணியளவில் தாங்கள் தகவல் பெற்றதாக கெடா மாநில தீயணைப்பு, மீட்புத்துறை, நான்காவது பிராந்தியத்தின் தலைவர் ஸம்ரி அப்துல் கானி தெரிவித்தார்.
படகுத்துறையில் நிறுத்தப்பட்டிருந்த மொத்தம் நான்கு பெர்ரிகளில் மூன்று இந்தத் தீ விபத்தில் சேதமுற்றதாக அவர் குறிப்பிட்டார்.
தீ ஏற்பட்டதற்கான காரணங்கள் தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.








