Oct 18, 2026
Thisaigal NewsYouTube

நிலத்தடி செப்பு கம்பிகளை களவாடிய இரு நபர்கள் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நிலத்தடி செப்பு கம்பிகளை களவாடிய இரு நபர்கள் கைது

கோம்பாக் , செப்டம்பர் 03-

மலாயன் ரயில்வே பெர்ஹாட்டிற்கு சொந்தமான ரவாங், மின்சார நிலையம் ஒன்றின் கட்டடத்தில் நிலத்தடி செப்பு கம்பிகளை களவாடுவதற்கு முயற்சி செய்த இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 9.10 மணியளவில் கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து அந்த இரு நபர்களும் வளைத்துப்பிடிக்கப்பட்டதாக மலாயன் ரயில்வே பெர்ஹாட்டின் உதவிப் போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் ஹரிசன் ஹாசன் தெரிவித்தார்.

அந்த மின்சார நிலையத்தின் ஆபத்து, அவசர அலாறம் ஒலிப்பதாக உதவிப்போலீசார் தலைமையகத்திலிருந்து கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து செராண்டா அலுவலகத்தில் உள்ள உதவிப் போலீஸ்காரர்கள் உஷாராகியதாக அவர் குறிப்பிட்டார்.

பின்னர் சம்பவ இடத்தை உதவி போலீஸ்காரர்கள் சோதனை செய்தபோது நிலத்தடி செப்பு கம்பிகளை களவாட முயற்சித்த இரு நபர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →