Sep 26, 2026
Thisaigal NewsYouTube
மே 4-ஆம் தேதி ரஃபிஸி ரம்லியிடம் விசாரணை - எஸ்பிஆர்எம் தகவல்
தற்போதைய செய்திகள்

மே 4-ஆம் தேதி ரஃபிஸி ரம்லியிடம் விசாரணை - எஸ்பிஆர்எம் தகவல்

Share:

கோலாலம்பூர், மே.02-

1.1 பில்லியன் ரிங்கிட் முதலீட்டு ஒப்பந்த முறைகேடு, குற்றச்சாட்டுகள் தொடர்பாக, முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லியை, வரும் திங்கட்கிழமை விசாரணைக்காக அழைக்கவுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தெரிவித்துள்ளது.

வரும் மே 4 ஆம் தேதி காலை 10 மணியளவில் புத்ராஜெயா எஸ்பிஆர்எம் தலைமையகத்தில், ரஃபிஸியின் வாக்குமூலமானது பதிவு செய்யப்படும் என எஸ்பிஆர்எம் மூத்த விசாரணை இயக்குநர் Datuk Mohd Hafaz Nazar தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணையானது, பொருளாதார அமைச்சும், Chip தயாரிப்பு நிறுவனமான Arm Holdings-ம் இணைந்து மேற்கொண்ட உத்திசார் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மையமாகக் கொண்டு நடைபெற்று வருகின்றது.

கடந்த பிப்ரவரி மாதம் 13 -ஆம் தேதி, விசாரணை தொடங்கியதிலிருந்து, இதுவரை அமைச்சர்கள் மற்றும் பல அரசாங்க நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் உட்பட மொத்தம் 22 பேரின் வாக்குமூல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக Hafaz Nazar குறிப்பிட்டுள்ளார்.

Related News