Sep 15, 2026
Thisaigal NewsYouTube
தெமர்லோவில் 32 லிட்டர் டீசலுடன் லோரி - கார் விபத்து: தாய் மகன் பரிதாப பலி
தற்போதைய செய்திகள்

தெமர்லோவில் 32 லிட்டர் டீசலுடன் லோரி - கார் விபத்து: தாய் மகன் பரிதாப பலி

Share:

பகாங் மாநிலம் தெமர்லோ பகுதியில் ஜாலான் தெமெர்லோ திரியாங் சாலையின் 9-வது கிலோமீட்டரில் நேற்று பிற்பகல் எரிபொருள் டேங்கர் லாரியும் பெரோடுவா பேசா காரும் மோதிய விபத்தில், காரில் பயணித்த 39 வயது பெண்ணும் அவரது 12 வயது மகனும் உயிரிழந்தனர்.

தெமர்லோ மாவட்ட போலீஸ் தலைவர் மொகமட் நசியாம் பாஹ்ரோன் கூறுகையில், இந்த விபத்தில் இரு வாகனங்களும் தீப்பிடித்ததாக தெரிவித்தார்.

உயிரிழந்த இருவரின் அடையாளங்களும் அவர்களது நெருங்கிய உறவினர்களிடமிருந்து பெறப்படும் மரபணு மாதிரிகளுடன் ஒப்பிட்டு உறுதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், சிரம்பானில் இருந்து தெமர்லோ நோக்கி 32,000 லிட்டர் டீசல் ஏற்றிச் சென்ற டேங்கர் லோரி, கட்டுப்பாட்டை இழந்து எதிர்ப்புற பாதையில் சென்றதாகத் தெரியவந்துள்ளது.

மோதலின் தாக்கத்தில் டேங்கர் லோரியானது, காரை நசுக்கியதுடன், இரு வாகனங்களும் தீப்பிடித்தன.

டேங்கர் லாரியை ஓட்டிச் சென்ற 37 வயது ஓட்டுநர் தப்பியதுடன், சிறிய காயங்களுடன் உயிர் தப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.

Related News