Sep 14, 2026
Thisaigal NewsYouTube
கோல கங்சாரில் பையில் அடைக்கப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு
தற்போதைய செய்திகள்

கோல கங்சாரில் பையில் அடைக்கப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு

Share:

கோலா கங்சாரில் டத்தாரான் லெம்பா ஜெட்டி அருகே பையில் அடைக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை சுமார் 4 மணியளவில் சடலத்தை கண்டுபிடித்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் 30 வயதுகளில் உள்ள பெண் என தெரியவந்துள்ளது. எனினும், அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

சடலமானது மேலதிக நடவடிக்கைகளுக்காக தைப்பிங் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவமானது குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்காக விசாரிக்கப்பட்டு வருகின்றது.

Related News