Aug 15, 2026
Thisaigal NewsYouTube
மாணவர்களின் போராட்டத்திற்கு வெற்றி: AUKU சட்டம் முழுமையாக ரத்து செய்வதாக அன்வார் அதிரடி அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

மாணவர்களின் போராட்டத்திற்கு வெற்றி: AUKU சட்டம் முழுமையாக ரத்து செய்வதாக அன்வார் அதிரடி அறிவிப்பு

Share:

பல்கலைக்கழக மாணவர்களுக்கு கூடுதல் சுதந்திரம் வழங்கும் வகையில், 1971 பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழக கல்லூரிகள் சட்டமான AUKU முழுமையாக ரத்து செய்யப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

மலாக்கா, ஆயர் கெரோவில் உள்ள மலாக்கா அனைத்துலக வர்த்தக மையத்தில் நடைபெற்றும் வரும் பிகேஆர் தேசிய மாநாட்டில் உரையாற்றிய போது, பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

AUKU சட்டத்தில் ஏற்கெனவே பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மாணவர் அமைப்புகளுக்கு அதிக சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தாலும் கூட, சட்டத்தின் சில விதிமுறைகள் தொடர்பாக மாணவர்கள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வருவதாக அன்வார் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக, இந்தச் சட்டத்தை அரசாங்கம் முழுமையாக ரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக அன்வார் அறிவித்துள்ளார்.

AUKU சட்டம் கடந்த 2025-ஆம் ஆண்டு திருத்தப்பட்ட பிறகு, அந்த திருத்தத்தின் மூலம் மாணவர் அமைப்புகளுக்கு நிதி திரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் அதிக சுதந்திரம் வழங்கப்பட்டது.

இருப்பினும், AUKU சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என்று உயர் கல்வி அமைச்சு முன்னதாக தெரிவித்திருந்தது.

அமைச்சின் இந்த நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி, 30-க்கும் மேற்பட்ட மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த 40 மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்று, AUKU சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே, ஜசெக இளைஞர் அணியும் AUKU சட்டத்தை ரத்து செய்வதற்காக கடந்த 2019-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குழுவை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று உயர் கல்வி அமைச்சை வலியுறுத்தியது.

மேலும், கடந்த ஏப்ரல் மாதம் Sekretariat Mansuh Auku என்ற மாணவர் அமைப்பு, AUKU சட்டத்தை முழுமையாக ரத்து செய்யக் கோரி நாடு தழுவிய பிரசாரத்தைத் தொடங்கியது.

இந்நிலையில், மாணவர்களின் நீண்டகால கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் AUKU சட்டமே முழுமையாக ரத்து செய்யப்படும் என்று பிரதமர் அன்வார் அறிவித்திருப்பது, நாட்டின் உயர்கல்வித் துறையில் முக்கிய மாற்றத்துக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

கைவிட்டப்பட்ட பிராணிகள் உள்ளிட்ட அனைத்து விலங்குகளிடமும் இரக்கம் காட்ட வேண்டும் - சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்து

கைவிட்டப்பட்ட பிராணிகள் உள்ளிட்ட அனைத்து விலங்குகளிடமும் இரக்கம் காட்ட வேண்டும் - சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்து

கோல கங்சாரில் பையில் அடைக்கப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு

கோல கங்சாரில் பையில் அடைக்கப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு

அன்வார் – சாஹிட் இடையிலான நம்பிக்கை மிகவும் குறைந்துள்ளது: கைரி ஜமாலுதீன் கருத்து

அன்வார் – சாஹிட் இடையிலான நம்பிக்கை மிகவும் குறைந்துள்ளது: கைரி ஜமாலுதீன் கருத்து

ரொம்பினில் வீடு தீக்கிரையானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

ரொம்பினில் வீடு தீக்கிரையானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

தெமர்லோவில் 32 லிட்டர் டீசலுடன் லோரி - கார் விபத்து: தாய் மகன் பரிதாப பலி

தெமர்லோவில் 32 லிட்டர் டீசலுடன் லோரி - கார் விபத்து: தாய் மகன் பரிதாப பலி

தாபோங் ஹாஜி வாரியத்தில் பணமோடியும், முறைகேடும் நடந்தது முற்றிலும் உண்மை: பிகேஆர் தேசிய மாநாட்டில் அன்வார் உறுதி

தாபோங் ஹாஜி வாரியத்தில் பணமோடியும், முறைகேடும் நடந்தது முற்றிலும் உண்மை: பிகேஆர் தேசிய மாநாட்டில் அன்வார் உறுதி