Sep 15, 2026
Thisaigal NewsYouTube
ரொம்பினில் வீடு தீக்கிரையானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

ரொம்பினில் வீடு தீக்கிரையானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

Share:

பகாங் மாநிலம் ரொம்பின், முவாட்சாம் ஷா, டேசா மாவார் பகுதியில் இன்று அதிகாலை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.

இன்று அதிகாலை 4.11 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இந்த தீ விபத்தில் ஆடவர் ஒருவர், அவரது மனைவி மற்றும் அவர்களது மகன் ஆகிய மூவர் உயிரிழந்ததாக Pahang தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் சலாஹுடின் இஷா தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்தவர்களின் மற்ற இரண்டு பிள்ளைகள் உயிர் தப்பியுள்ளனர்.

அதேவேளையில், அந்த வீட்டிற்கு அருகில் இருந்த வீட்டிலும் தீப்பற்றி 70 சதவிகிதம் தீயில் கருகியதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இத்தீ விபத்துக்கான காரணம் மற்றும் ஏற்பட்ட மொத்த சேதத்தின் மதிப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News