Sep 6, 2026
Thisaigal NewsYouTube
அன்வார் – சாஹிட் இடையிலான நம்பிக்கை மிகவும் குறைந்துள்ளது: கைரி ஜமாலுதீன் கருத்து
தற்போதைய செய்திகள்

அன்வார் – சாஹிட் இடையிலான நம்பிக்கை மிகவும் குறைந்துள்ளது: கைரி ஜமாலுதீன் கருத்து

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மற்றும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகம்ட சாஹிட் ஹமீடி ஆகியோருக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கை, கடந்த 2022-ஆம் ஆண்டு ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டதிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக முன்னாள் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுதின் தெரிவித்துள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சரான கைரி, தனது 'கெலுவார் கெஜாப்' என்ற போட்காஸ்ட் நிகழ்ச்சியில் வெளியிட்டுள்ள கருத்தில், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் கூட்டணியானது பெரிகாத்தான் நேஷனல் உடன் இணைந்து போட்டியிட்டது, பாரிசான் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் இடையே மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது துரோகம் என பக்காத்தான் கூறினாலும், ஒற்றுமை அரசாங்கத்தில் இணைந்து செயல்பட மட்டுமே பாரிசான் முன்பு ஒப்புக் கொண்டிருந்ததாக கைரி தெரிவித்துள்ளார்.

பக்காத்தானுடன் கூட்டணி அமைத்ததற்காக என்றென்றும் அவர்களுடன் கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை என்றும் கைரி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஒற்றுமை அரசாங்கத்திற்கு பாரிசான் தொடர்ந்து எவ்வளவு காலம் ஆதரவளிக்கும் என்பதே தற்போது முக்கியமான கேள்வி என்றும், அடுத்த பொதுத் தேர்தல் நடைபெறும் காலம் பெருமளவில் அந்தக் கூட்டணியைச் சார்ந்திருக்கும் என்பதையும் கைரி சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்நிலையில், பிகேஆரில் இருந்து விலகிய சில நாடாளுமன்ற உறுப்பினர்களும், சபா மாநிலத்தைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாரிசானில் இணைய ஆர்வம் காட்டுவதால், அரசாங்கத்தில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு எண்ணிக்கை மேலும் குறையக்கூடும் என்றும் கைரி தெரிவித்துள்ளார்.

ஆகவே, முடிவெடுக்கும் அதிகாரம் தற்போது சாஹிட்டின் கைகளில் தான் உள்ளது என்றும் கைரி விவரித்துள்ளார்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து