கோலாலம்பூர், ஆகஸ்ட்.05-
நாடாளுமன்றத்தில் இனத்துவேஷத் தன்மையில் கேள்வி எழுப்பிய பெரிக்காத்தான் நேஷனல் பெண்டாங் எம்.பி. அவாங் ஹாஷிம் மீது நடவடிக்கை எடுப்பதா? இல்லையா? என்பது குறித்து மக்களவை சபா நாயகர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் முடிவு செய்யவிருக்கிறார்.
13 ஆவது மலேசியத் திட்டத்தில் பூமிபுத்ராக்களுக்கு குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு எதுவும் ஒதுக்கப்படவில்லை என்று கூறி, இன்னொரு மே 13 கலவரத்தைக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறதா? என்று நேற்று மக்களவையில் மிரட்டல் விடுத்த பெண்டாங் எம்.பி. அவாங் ஹாஷிம் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஜெலுதோங் எம்.பி. ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தி இருந்தார்.
நாடாளுமன்ற நிலையாணை விதியை மேற்கோள்காட்டி ஆர்எஸ்என் ராயர் கொண்டு வந்துள்ள பிரேரணை தொடர்பில் தாம் முடிவு செய்யவிருப்பதாக சபா நாயகர் டான் ஶ்ரீ ஜொஹாரி தெரிவித்துள்ளார்.








