Dec 2, 2025
Thisaigal NewsYouTube
மாமன்னர் அப்துல்லாவுக்குக் கெளரவ டாக்டர் விருது
தற்போதைய செய்திகள்

மாமன்னர் அப்துல்லாவுக்குக் கெளரவ டாக்டர் விருது

Share:

மாமன்னர் சுல்தான் அப்துல்லாவிற்கு மலேசிய அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகம் இன்று தலைமைத்துவ தத்துவத்துறைக்கான கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது.

மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் 40 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. கெளரவ டாக்டர் பட்டத்தை பெற்று கொண்ட மாமன்னர் சுல்தான் அப்துல்லா, இந்த உயரிய பட்டத்தை வழங்கியதற்காக அப்பல்கலைக்கழகத்திற்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இது தமது சாதனைகளுக்கான அங்கீகாரம் மட்டும் அல்ல. மலேசிய மக்களின் அங்கீகாரமாகும் என்று மாமன்னர் தமது உரையில் தெரிவித்தார். இந்நிகழ்வில் அப்பல்கலைக்கழகத்தின் அரசமைப்பின் தலைவராக இருக்கும் பேரரசியார் துங்கு ஹஜா அஸீஸா அமினா மைமுனா இஸ்கண்டாரியாவும் கலந்து கொண்டார்.

Related News