Aug 7, 2026
Thisaigal NewsYouTube
RXZ Members 8.0 பேரணிக்குச் செல்லும் வழியில் 3 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பலி
தற்போதைய செய்திகள்

RXZ Members 8.0 பேரணிக்குச் செல்லும் வழியில் 3 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பலி

Share:

குவாந்தான், ஆகஸ்ட்.01-

திரெங்கானு மாநிலம், Kuala Nerus பகுதியில் நடைபெற்ற RXZ Members 8.0 மோட்டார் சைக்கிள் பேரணிக்குச் செல்லும் வழியில் நிகழ்ந்த மூன்று தனித்தனி சாலை விபத்துகளில், மூன்று மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழந்தனர்.

நேற்று முன்தினம் இரவு Temerloh பகுதியில் LPT1 விரைவுச்சாலையில், 19 வயது இளைஞரான Muhammad Zulhairi Azhar Mohd Shahrizan ஓட்டிச் சென்ற Yamaha LC135 மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விழுந்த போது, அந்த வழியாக வந்த கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக Temerloh மாவட்ட போலீஸ் தலைவர் Mohd Nasyim Bahron தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், நேற்று காலை Maran மாவட்டத்தில் நிகழ்ந்த மேலும் இரண்டு விபத்துகளில், 44 வயதான Mohd Fauzi Othman மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகி உயிரிழந்தார்.

மற்றொரு விபத்தில், 34 வயதான Muhamad Fikri Jamallunasi ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், அவசரப் பாதையில் நிறுத்தப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனத்தின் பின்புறத்தில் மோதியதில் அவர் பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி