Nov 7, 2025
Thisaigal NewsYouTube
ஜோகூரில் கொள்கலன் கப்பலில் தீ: மூவர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் கொள்கலன் கப்பலில் தீ: மூவர் உயிரிழந்தனர்

Share:

ஜோகூர் பாரு, நவம்பர்.07-

ஜோகூரில் கொள்கலன்களை ஏற்றி வந்த கப்பல் ஒன்று தீப்பிடித்துக் கொண்டதில் மூவர் உயிரிழந்தனர். இதர மூவர் தீக்காயங்களுக்கு ஆளாகினர்.

இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில் ஜோகூர், தஞ்சோங் பெலெப்பாஸ் துறைமுகத்தில் நிகழ்ந்தது.

MSC Kyparissia கப்பலில் ஏற்பட்ட தீயில் 59 வயது மலேசியர், 40 வயது பிலிப்பைன்ஸ் பிரஜை மற்றும் 40 வயது பிரிட்டிஷ் பிரஜை ஆகியோர் உயிரிழந்ததாக அடையாளம் கூறப்பட்டது.

காயமுற்ற 26 வயது மலேசியர், 40 வயது மதிக்கத்தக்க இரண்டு பிலிப்பைன்ஸ் பிரஜைகள் இஸ்லண்டார் புத்ரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Related News

ஜோகூரில் கொள்கலன் கப்பலில் தீ: மூவர் உயிரிழந்தனர் | Thisaigal News