மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா, ஒரு மாத கால மருத்துவ சிகிச்சையை முடித்துக்கொண்டு லண்டனிலிருந்து இன்று காலையில் நாடு திரும்பினார். மாநில அரசியார் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் னுடன் சுல்தான் நாடு திரும்பியதை சிலாங்கூர் மாநில காபந்து அரசின் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முகநூல் வழி தெரிவித்துள்ளார். இறைவன் அருளில் சுல்தானின் மருத்துவ சிகிச்சை சீராக நடைபெற்று முடிந்ததுள்ளது. சுல்தான் நலமுடன் இருக்கிறார் என்று மந்திரி பெசார் தெரிவித்தார். முன்னதாக, சிப்பாங் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் சுல்தானை அமிருடின் ஷாரி வரவேற்கும் காட்சி தொடர்புடைய புகைப்படங்களை அவர் தமது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார். புரோஸ்டேட் ஹோல்மியம் லேசர் எனும் அணுக்கதிர் அறுவை சிகிச்சைக்காக சுல்தான் ஷராபுடின் கடந்த ஜூலை 28ஆம் தேதி முதல் லண்டன் சென்றிருந்தார்.
சுல்தான் நாடு திரும்பியதைத் தொடர்ந்து தேர்தலுக்கு பிந்திய சிலாங்கூர் மந்திரி பெசாரின் பதவியேற்பு சடங்கு மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்களின் நியமனங்கள் எப்போது நடைபெறும் என்பதை அமிருடின் ஷாரி விவரிக்கவில்லை.

Related News

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 Lenova Tablet கைக்கணினி வழங்கப்பட்டது

பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா தற்காலிக விடுப்பு

ஆசிரியை மரணம்: ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கோரிக்கை வலுக்கிறது

போலி மற்றும் மாற்று அடையாள அட்டைகளைப் பயன்படுத்திய வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது

கோலாலம்பூர் - கொச்சின் விமானத்தில் அவசரகால கதவைத் திறக்க முயன்ற பயணி கைது


