குவாந்தான், ஜனவரி.27-
பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், அமலாக்க அதிகாரிகள் போல் நாடகமாடிய மோசடி கும்பலிடம் சிக்கி சுமார் 2 லட்சத்து 85 ஆயிரம் ரிங்கிட்டை இழந்துள்ளார்.
38 வயதான அந்த மருத்துவரைத் தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொண்ட மோசடிக் கும்பல், அவர் மீது பண மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளதாக நாடகமாடியுள்ளது.
மேலும் சம்பந்தப்பட்ட மருத்துவரை, தொடர்ந்து தொலைப்பேசி மூலமாக அச்சுறுத்திய அக்கும்பல், பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணப் பரிமாற்றம் செய்ய வைத்துள்ளது.
கிட்டத்தட்ட 12 முறை, சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான தொகையை அனுப்பிய பின்னரே அது ஒரு மோசடி செயல் என்பதை மருத்துவர் உணர்ந்துள்ளதாக பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ ஶ்ரீ யஹாயா ஒத்மான் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் யாரும் இது போன்ற மோசடி வலைகளில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க விழிப்புடன் இருக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.








