கோலாலம்பூர், ஜனவரி.26-
முன்னாள் இராணுவத் தளபதி டான் ஶ்ரீ முஹமட் ஹாஃபிஸுடின் ஜந்தான் இன்று செய்துள்ள இரண்டு புகார்கள் தொடர்பான விசாரணையை, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளது.
இது குறித்து கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முன்னாள் உயர் இராணுவ அதிகாரி தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட்டது மற்றும் தவறான தகவல்களைப் பரப்பியது தொடர்பான புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதன் உள்ளடக்கங்கள் மற்றும் விசாரணையை புக்கிட் அமான் தலைமையகம் கவனிக்கும்," என உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, முகமட் ஹாஃபிஸுடின் இன்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் இரண்டு புகார்களைச் செய்தார்.
முகமட் ஹாஃபிஸுடின் பல லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள Patek Philippe ரக ஆடம்பரக் கடிகாரத்தை அணிந்திருப்பதாக செகுபார்ட் சுமத்தியுள்ள அவதூறு மற்றும் தவறான தகவல் குறித்து இரண்டாவது புகார் செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தற்போது நாட்டின் உயர்மட்ட போலீஸ் பிரிவால் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது என டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.








