கடந்த வாரம் தனது காதலியை கொலை செய்ததாக ஆடவர் ஒருவர், இன்று வெள்ளிக்கிழமை ஈப்போ, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார். 23 வயது சைனி எர்வென்டி சொபியான் சானி என்ற அந்த ஆடவர், கடந்த ஜுன் 24 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணியளவில் ஈப்போ, தாமான் சொங் சூன், பெர்சியாரான் ராபாட் என்ற இடத்தில் தமது காதலியான 24 வயது ஷவானி அப்துல்லா என்பவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த ஆடவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
மாஜிஸ்திரேட் ஜெசிகா டைமிஸ் முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த ஆடவர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


