ஜார்ஜ்டவுன், நவம்பர்.07-
பினாங்கு மாநில அரசு இலாகாவின் முன்னாள் துணை இயக்குநர் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது. தாம் துணை இயக்குநரான பொறுப்பில் இருந்த போது, அரசாங்க குத்தகை ஒன்றை வழங்குவதற்கு குத்தகையாளர் ஒருவரிடமிருந்து 35 ஆயிரம் ரிங்கிட்டைப் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் அந்த அதிகாரியை பினாங்கு மாநில எஸ்பிஆர்எம் அலுவலகம் கைது செய்துள்ளது.
50 வயது மதிக்க அந்த முன்னாள் துணை இயக்குநர், இன்று காலை 10 மணிக்கு பினாங்கு மாநில எஸ்பிஆர்எம் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சம்பந்தப்பட்ட முன்னாள் அரசு அதிகாரி கைது செய்யப்பட்டதை எஸ்பிஆர்எம் பினாங்கு மாநில இயக்குநர் டத்தோ எஸ். கருணாநிதி உறுதிப்படுத்தினார்.








