Sep 25, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் சுரண்டலுக்காக சிறுமிகளைக் கடத்தியதாக  நபர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பாலியல் சுரண்டலுக்காக சிறுமிகளைக் கடத்தியதாக நபர் மீது குற்றச்சாட்டு

Share:

பாலியல் சுரண்டலுக்காக 15 முதல் 17 வயதுக்குட்பட்ட மூன்று சிறுமிகள் உட்பட நான்கு பேரைக் கடத்தியதாக 32 வயது நபர் ஒருவர் சண்டக்கான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

சூ நியுக் ஷெங் என்ற அந்த நபர், கடந்த மே 14 அன்று சண்டாக்கானில் உள்ள ஒரு ஹோட்டலில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சம்பத்தன்று போலீசார் நடத்திய நள்ளிரவு சோதனையில் நான்கு பேர் மீட்கப்பட்டதுடன் சந்தேகப்பேர்வழியும் கைது செய்யப்பட்டார்.

மாஜிதிரேட் நூர் ஃபாயிஸா ஜாஃப்ரி முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த நபரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. அவருக்குப் பிணை வழங்க மறுத்த நீதிமன்றம், இந்த வழக்கை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை செய்வதற்காக ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Related News