கோலாலம்பூர், நவம்பர்.11-
ஓப் நோடா என்ற ஒருங்கிணைக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் கீழ் போலீஸ் துறை 398 பேரைக் கைது செய்துள்ளது என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை சிஐடி இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை, கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை வரை நாடு முழுவதும் ஏக காலத்தில் மேற்கொள்ளப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
கிட்டத்தட்ட 118 இன்னிசை மையங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இதில் 103 மையங்கள் முறையான லைசென்ஸ் இன்றி செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் விளக்கினார்.
கைது செய்யப்பட்டவர்களில் 5 மையங்களில் உரிமையாளர்களும், மூன்று மையங்களில் நிர்வாகிகளும் அடங்குவர். மேலும் 150 மணியாளர்கள், 112 வாடிக்கையாளர்கள், 128 வெளிநாட்டு உபசரிப்புப் பெண்கள் கைது செய்யப்பட்டதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.








