Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மூன்றரை லட்சம் பேர் வாகனமோட்டும் லைசென்ஸைப் புதுப்பித்துள்ளனர்
தற்போதைய செய்திகள்

மூன்றரை லட்சம் பேர் வாகனமோட்டும் லைசென்ஸைப் புதுப்பித்துள்ளனர்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.14-

புடி95 பெட்ரோல் ரோன் 95 சலுகைத் திட்டத்தை அரசாங்கம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி அமல்படுத்தியது மூலம் காலாவதியாகி கிடந்த தங்களின் வாகனமோட்டும் லைசென்ஸை 3 லட்சத்து 51 ஆயிரம் பேர் புதுப்பித்துள்ளனர் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

செல்லத்தக்க லைசென்ஸை வைத்திருக்கும் மலேசியர்கள் மட்டுமே சலுகை விலையில் லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 காசுக்கு விற்கப்படும் ரோன் 95 பெட்ரோலை வாங்க முடியும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டதன் காரணமாக பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் காலாவதியாகி கிடந்த மூன்றரை லட்சம் லைசென்ஸ்சுகளுக்கு இப்போது உயிரூட்டப்பட்டுள்ளது என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

புடி95 திட்டம் தொடர்பான அறிவிப்பை கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட பின்னர் பலர் தங்கள் லைசென்ஸைப் புதுப்பித்துள்ளனர். அன்றைய தினத்திலிருந்து கிட்டத்தட்ட 38 விழுக்காடு லைசென்ஸ்சுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக இன்று புத்ராஜெயாவில் சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே நிகழ்வில் உரையாற்றுகையில் அந்தோணி லோக் இதனைத் தெரிவித்தார்.

Related News