Jun 16, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் ஏரோலைன் பேருந்து சேவை நிறுத்தம்: 20 ஆண்டு காலப் பயணம் நிறைவு
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரில் ஏரோலைன் பேருந்து சேவை நிறுத்தம்: 20 ஆண்டு காலப் பயணம் நிறைவு

Share:

இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வந்த பிரபல பிரீமியம் பேருந்து சேவையான ஏரோலைன், கோலாலம்பூரில் தனது செயல்பாடுகளை முழுமையாக நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட முனையங்களில் இருந்து மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் கடுமையான உத்தரவைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 1( ஒன் ) உத்தாமா, / லாலாபோர்ட் / மற்றும் ஐஓஐ சிட்டி மால் ஆகிய மூன்று இடங்களுக்கு மட்டுமே தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாற்று இடமான லாலாபோர்ட்-இல் விதிக்கப்படும் வணிகக் கட்டணங்கள் தங்களின் சேவை நோக்கத்திற்கு ஒத்து வராததால், கோலாலம்பூர் சேவையிலிருந்து முற்றிலும் விலகி, மற்ற பகுதிகளில் கவனம் செலுத்தப் போவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாங்கள் சமீபத்தில் மாற்றிய டிஆர்எக்ஸ் முனையம் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருந்தபோதிலும், இந்த விதிமுறை கட்டுப்பாடுகளால் சேவையை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஏரோலைன் வருத்தம் தெரிவித்துள்ளது.

Related News