Jul 31, 2026
Thisaigal NewsYouTube
மாணவரைத் தாக்கிய ஆசிரியர் - விசாரணையில் கல்வி அமைச்சு
தற்போதைய செய்திகள்

மாணவரைத் தாக்கிய ஆசிரியர் - விசாரணையில் கல்வி அமைச்சு

Share:

பள்ளிக் கூடத்தின் அதிகாரப் பூர்வ நிகழ்ச்சியில் மாணவர் ஒருவரை ஆசிரியர் தாக்கிய காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் தீயாப் பரவி வந்துள்ளது. அந்தக் காணொலி குறித்து தற்போது கல்வி அமைச்சு விசாரித்து வருகிறது.

ஆசிரியர்கள் எப்போதும் முறையான நெறிமுறைகளைப் பேணவும், ஆசிரியர் தொழிலை நிலைநாட்டவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார் என அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மாணவர்களின் பாதுகாப்புக்கும் ஆசிரியர்களின் நலனிலும் கல்வி அமைச்சு முன்னுரிமை கொடுத்து வருகிறது. எனவே மிக விரைவில் நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என்றது அமைச்சு.

Related News