Oct 17, 2026
Thisaigal NewsYouTube

கொலைக்கான காரணங்கள் ஆராயப்படுகின்றன

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கொலைக்கான காரணங்கள் ஆராயப்படுகின்றன

கோலாலம்பூர், நவ. 12-


மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயாரை கொன்று, அவரின் உடலை வீட்டின் ஐஸ் பெட்டிக்குள் ஒளித்து வைத்திருந்த மகனின் செயல் குறித்து போலீசார் பல கோணங்களில் விசாரணை செய்து வருவதாக கோலாலம்புர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.

கோலாலம்பூர், பழைய கிள்ளான் சாலை ஓ.யு.ஜி. கார்டனில் உள்ள ஒரு வீட்டில் கடந்த மூன்று ஆண்டு காலமாக தனது தாயாரின் உடலை ஐஸ் பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்த 53 வயது நபர், இன்று காலையில், தானே முன்வந்து, போலீசுக்கு தகவல் அளித்து, சரண் அடைந்துள்ளதாக டத்தோ ருஸ்டி குறிப்பிட்டார்.

அந்த நபர் தற்போது குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வரும் வேளையில் கொலைக்கான காரணத்தை போலீசார் ஆராய்ந்து வருவதாக இன்று மாலையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ருஸ்டி குறிப்பிட்டார்.

80 வயதுடைய தனது தாயாரை அந்த நபர் அடித்தே கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ள வேளையில் இது குறித்து தகவல் அளிக்காமல் சடலத்தை ஐஸ் பெட்டிக்குள் மறைத்து வைத்ததற்கான காரணத்தையும் போலீசார் ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் தகவல் கொண்டிருப்பவர்கள் போலீசாருடன் தொடர்பு கொள்ளுமாறு பொது மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே கைது செய்யப்பட்ட அந்த 53 வயதுடைய நபரின் உறவினர்களை அடையாளம் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த இந்த கொலை எவ்வாறு குடும்ப உறப்பினர்களுக்கு தெரியாமல் போனது என்பது குறித்து பல்வேறு கோரணங்களில் போலீசார் ஆராய்கின்றனர். பிடிபட்டுள்ள நபர், மனோநோயாளியா? என்பதற்கான சந்தேகமும் ஆரயாப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →