பாரீஸ் , ஜூலை 19-
பாரீஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் புதிதாக சேர்க்கப்பட்ட விளையாட்டுகளில் ஒன்று பிரேக்கிங். இதில், 2 நிகழ்வுகள் நடைபெறுகிறது. இதற்காக 16 ஆண்கள் மற்றும் 16 பெண்கள் என்று மொத்தமாக 32 போட்டியாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஒட்டுமொத்த உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த பாரீஸ் 2024 ஒலிம்பிக் தொடர் இன்னும் 7 நாட்களில் பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தமாக 32 விளையாட்டுகள் நடைபெறுகிறது. இதில், 329 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது. பாரீஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் 204 நாடுகளிலிருந்து 10,714 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.







