ஈப்போ, நவம்பர்.02-
தன்னைப் போலீஸ்காரர் என்று அடையாளப்படுத்திக் கொண்டு மக்களிடம் பணம் பறித்து வந்ததாக நம்பப்படும் 20 வயது மதிக்கத்தக்க நபரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்த நபர் நேற்று சனிக்கிழமை ஈப்போ, பெர்சாம், தாமான் ஈப்போ திமோர் பாராட்டில் உள்ள ஓர் உணவகத்தின் முன் கைது செய்யப்பட்டார்.
போக்குவரத்து போலீஸ்காரைரப் போல் சீருடை அணிந்து கொண்டு, மோட்டார் சைக்கிளையும் போலீஸ் ரோந்து மோட்டார் சைக்கிளைப் போல் வடிவமைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டி வந்த நபர் குறித்த காணொளி வைரலானதைத் தொடர்ந்து அந்த நபர் அடையாளம் காணப்பட்டதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஸைனால் அபிடின் அபாங் அஹ்மாட் தெரிவித்தார்.








