தற்பொழுது நிலவி வரும் வெப்ப உயர்நிலை காரணமாக, பள்ளிக்கூடங்களில் வெளி நடவடிக்கைகளான உடல் பயிற்சி பாடம் மற்றும் புறப்பாட நடவடிக்கைகளுக்கு அனுமதியில்லை என கடந்த மாதம் கல்வி அமைச்சர் அறிவித்திருந்த அறிவிப்பு தொடர்பாக , மீண்டும் ஒரு புதிய வரையறை வகுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வரையறையில், குறிப்பிட்ட சில நேர வேளையில் மாணவர்கள் , உடற்பயிற்சி பாடத்தை மேற்கொள்ள கல்வி அமைச்சு அனுமதி வழங்கும் என டிக்டொக் வழியாக பதிவான 30 வினாடி காணொலியின் வழி தெரிவித்துள்ளார்.
மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளார்கள் நலன் கருத்தி, நாட்டில் நிலவி வரும் அதிகமான வெப்ப சூழ்நிலையிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், கல்வி அமைச்சு அனைத்து பள்ளி மற்ரும் பல்கலைக்கழங்களின் வெளி நடவடிக்கைகளை முடக்கி வைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.








