கோலாலம்பூர், நவம்பர்.08-
போலீஸ்காரர்களை அவமானப்படுத்தியதோடு, அவர்கள் தங்களது கடமைகளைச் செய்யவிடாமல் தடுத்ததாக நம்பப்படும் ‘இன்ஸ்பெக்டர் ஷீலாவிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த நம்பவர் 4-ஆம் தேதி, ஜாலான் ஈப்போவில், ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டவர் ஒருவரைப் போலீசார் விசாரித்த போது, அதில் குறுக்கிட்ட இன்ஸ்பெக்டர் ஷீலா, அவர்களிடம் சர்ச்சையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது.
போலீஸ்காரர்களிடம் ஷீலா வாக்குவாதம் செய்யும் காட்சியைக் கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்காக, விசாரணை ஆவணங்கள் அரசு தரப்பு துணை வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்படும் என்று ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.








