சிப்பாங், அக்டோபர்.17-
கோலாலம்பூர் விமான நிலையம் இரண்டில், போலியான பாஸ்போர்ட் முத்திரைகளைப் பயன்படுத்த முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து வியட்நாம் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி, KLIA2 விமான நிலையத்தில், அவர்கள் 5 பேர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
மூன்று பெரியவர்கள் மற்றும் இரண்டு இளம் பெண்கள் அடங்கிய அக்குழுவிடம் இருந்த பாஸ்போர்ட்டுகளில் உள்ள குடிநுழைவு முத்திரைகள், போலியாகத் தயாரிக்கப்பட்டது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதே வேளையில், MyIMMS குடிநுழைவு அமைப்பில் மேற்கொண்ட சரிபார்ப்பில், அவர்களது முத்திரைகளுடன் பொருந்தும் பயணங்கள் ஏதும் பதிவாகவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், அவர்கள் 5 பேரும் மேல் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.