Jul 31, 2026
Thisaigal NewsYouTube
தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் இல்லை !
தற்போதைய செய்திகள்

தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் இல்லை !

Share:

சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவலைப் போல், மலேசியர்கள் அனைவரும் கட்டாயமாக கோவிட்-19 கூடுதல் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள வேண்டும் என எந்தவிதமான ஆணையையும் அரசாங்கம் பிறப்பிக்க வில்லை என தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் தற்போதைய அறிவுறுத்தலின்படி, ஆபத்தான நிலையில் இருக்கும் தரப்பினர், மூன்றாவது கூடுதல் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதை ஊக்குவிப்பதாக, ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளராக இருக்கும் ஃபஹ்மி ஃபட்சில் குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவலில் சற்றே குழப்பம் ஏற்பட்டதால், தவறான செய்தி விரைவாகப் பரவியது. இனி, சமூக ஊடகங்களில் பகிரும் முன்னர் அந்தத் தகவலின் உண்மைத் தன்மையை நாம் சரி பார்த்த பின்னரே பகிர வேண்டும் என்றார் அவர்.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர் சந்திப்பை சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் டிசுல்கிஃப்லி அஹ்மாட் ஏற்பாடு செய்து விளக்கம் கொடுக்க பரிந்துரைக்க இருப்பதாக ஃபஹ்மி கூறினார்

Related News